பொது செய்தி

தமிழ்நாடு

'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம் விதவைகள் அதிகம்'

Added : மே 18, 2020
Share
Advertisement

ஓசூர்: ''தமிழகத்திலேயே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான், இளம் விதவைகள் அதிகம் வாழ்கின்றனர். இதற்கு மது அரக்கனே காரணம்,'' என கிருஷ்ணகிரி எம்.பி., செல்லகுமார் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், ஆட்டோ டிரைவர்கள், சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அவர் கூறியதாவது: இந்தியாவில், ஊரடங்கால் பல கோடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி, 20 லட்சம் கோடியில் திட்டத்தை அறிவிப்பதாக கூறிய நிலையில், நிதியமைச்சர் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதுப்புது கணக்குகளை கூறி ஏமாற்றி வருகிறார். இந்த அறிவிப்புகள் மற்றும் திட்டங்களில் பல, லோக்சபாவில் அறிவிக்கப்பட்டு பிரதமரால் துவக்கப்பட்டவை. விவசாயிகள், தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தவர்களுக்கு, ஒரு ரூபாயாவது கிடைத்ததா என்றால் இல்லை. இந்த குற்றச்சாட்டை காங்., முன் வைத்தால், பொருளாதாரம் தெரியாமல் பேசுவதாக கூறுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்க தலைவரே, நிதியமமைச்சரின் நான்காவது அறிவிப்பு, இந்தியாவில் உள்ள, 130 கோடி மக்களை ஏமாற்றிய துக்க தினம் என கூறியுள்ளார். கொரோனாவால் பாதித்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின், கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்திலேயே அதிக இளம் விதவைகள் வாழ்வது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் என்ற புள்ளி விபரம் கிடைத்துள்ளது. அதற்கு காரணம், மது என்ற அரக்கன் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X