பெட்ரோல் போட மறுத்த மேனேஜருக்கு அடி, உதை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் போட மறுத்த மேனேஜருக்கு அடி, உதை

Added : மே 18, 2020
Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சென்னை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், எலத்தகிரியை சேர்ந்த சந்தோஷ்சிவன், 26, என்பவர் மேனேஜராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கு உத்தரவால் பெட்ரோல் பங்குகள் காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் மூவர் வந்துள்ளனர். அவர்களிடம், நேரம் முடிந்து விட்டதால் பெட்ரோல் போட முடியாது சந்தோஷ்சிவன் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மூவரும், சரமாரியாக தாக்கியதில், அவர் காயமடைந்தார். அவரது புகாரின்படி, கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., ஜெய்கீர்த்தி வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த விக்னேஷ், 21, ஆதில், 24, மற்றும் ஒருவர் என, மூன்று பேரை தேடி வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X