பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு கடன் சங்கங்களில் தவணை வசூலிக்க அவகாசம்

Added : மே 18, 2020
Share
Advertisement

சேலம்: கூட்டுறவு கடன் சங்கங்கள், வாடிக்கையாளர் பெற்ற கடனுக்கு, தவணைத்தொகை வசூலிக்க, மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்ரமணியம், மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, சுற்றறிக்கை மூலம் பிறப்பித்த உத்தரவு: இந்திய ரிசர்வ் வங்கி, 'கொரோனா' தொற்றால், வங்கி கடன்களுக்கு மாத தவணையை வசூலிக்க, மூன்று மாத காலம் அவகாசம் வழங்குவது தொடர்பாக, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கிய கடன் தொகைக்கும் பொருந்தும். அதனால், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், மண்டல இணைப்பதிவாளர்கள், இந்த நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X