மணல் கடத்திய 4 பேர் கைது: சரக்கு வாகனங்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய 4 பேர் கைது: சரக்கு வாகனங்கள் பறிமுதல்

Added : மே 18, 2020
Share

கெங்கவல்லி: சுவேத நதியில் மணல் கடத்திய நான்கு பேரை கைது செய்த போலீசார், இரு சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். கெங்கவல்லி அருகே, கூடமலை வழியாக செல்லும் சுவேத நதியில், வருவாய்த்துறையினர், கெங்கவல்லி போலீசார், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய, 'பொலிரோ' சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர் உதயரசு, 35, டிரைவர் மணிகண்டன், 23, தொழிலாளர்கள் ராம்குமார், 25, குமார், 27, ஆகியோர் மீது வழக்குப்பதிந்த போலீசார், டிரைவர், இரு தொழிலாளர்களை கைது செய்தனர். அதேபோல், வீரகனூர், சுவேத நதியில் மணல் கடத்திய, வீ.ராமநாதபுரம் ரவிச்சந்திரன், 38, என்பவரை, வீரகனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X