உத்தரபிரதேசம், ஒடிசா மாநில தொழிலாளர்களை வழியனுப்பி வைத்த அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரபிரதேசம், ஒடிசா மாநில தொழிலாளர்களை வழியனுப்பி வைத்த அதிகாரிகள்

Added : மே 18, 2020
Share

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 90 தொழிலாளர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். குமாரபாளையம் அருகே, காவேரி உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா, குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் பணியாற்றி வந்த, வடமாநில இளைஞர்கள் பலர் சில நாட்கள் முன்பு, நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல, ஈரோடு ரயில் நிலையம் சென்றுள்ளனர். இவர்களை விசாரித்த, ஈரோடு போலீசார் மீண்டும், தொழில்நுட்ப பூங்காக்களில் கொண்டு வந்து விட்டு சென்றனர். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., மணிராஜ், தொழிற்சாலை வளாகத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும் எனவும், அதற்குரிய அனுமதியை அந்தந்த மாநிலங்களின் இருந்து பெறப்படும் எனவும், அதன் பின் இ-பாஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்படும் என, கூறப்பட்டது. இவர்களுடன் மேட்டுக்கடை தனியார் ஸ்பின்னிங் மில் பணியாளர்களும், சொந்த மாநிலத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில், உத்தரபிரதேசம், ஒடிசா மாநில அனுமதி கிடைத்த நிலையில், 60 பேர் இரு பஸ்களில் உத்தரபிரதேசத்திற்கும், 30 பேர் ஒடிசாவிற்கும் தனி பஸ்ஸில் அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. ஆர்.டி.ஒ. மணிராஜ், தாசில்தார் தங்கம், ஆர்.ஐ., சுப்பிரமணி, வி.ஏ.ஓ., செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X