கோனேரிப்பட்டி ஏரியை தூர்வாரி சுத்தம் செய்யலாமே| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோனேரிப்பட்டி ஏரியை தூர்வாரி சுத்தம் செய்யலாமே

Added : மே 18, 2020
Share
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் உள்ள, கோனேரிப்பட்டி ஏரியை தூர்வாரி, சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராசிபுரத்தில் இருந்து, ஆத்தூர் செல்லும் சாலையில், நகராட்சி தொடங்கும் இடத்தில் கோனேரிப்பட்டி ஏரி உள்ளது. 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரிக்கு, போதைமலையில் இருந்து ஓடை வழியாக மழை காலத்தில் தண்ணீர் வரும். இதன் மூலம், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் உள்ள, கோனேரிப்பட்டி ஏரியை தூர்வாரி, சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராசிபுரத்தில் இருந்து, ஆத்தூர் செல்லும் சாலையில், நகராட்சி தொடங்கும் இடத்தில் கோனேரிப்பட்டி ஏரி உள்ளது. 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரிக்கு, போதைமலையில் இருந்து ஓடை வழியாக மழை காலத்தில் தண்ணீர் வரும். இதன் மூலம், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அது மட்டுமின்றி மீன்களும் வளரும். கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக சீமை கருவேலம் மரங்கள் அதிகளவு வளர்ந்திருந்தது. அதை வெட்டும் பணி தொடங்கி, கொரோனா ஊரடங்கால் பாதியில் நிற்கிறது. மழை காலத்தில், ஏரியில் குறிப்பிட்ட ஒரு பகுதியை தவிர, மற்ற பகுதிகளில் தண்ணீர் தேங்குவதில்லை. அதுமட்டுமின்றி ஏரியில் குப்பை கொட்டி நிரப்பி வருகின்றனர். மட்காத குப்பை, கோழி கழிவுகளை கொட்டுகின்றனர். அதேபோல், மற்றொரு பகுதியில் சாக்கடை நீரும் கலக்கிறது. இதனால், ஏரி வழியாக சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஏரியில் உள்ள மரங்களை அகற்றுவதுடன், கழிவு நீர், கோழி கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X