சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான டிரைவர் சடலமாக மீட்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் அருகே, மாயமான டிரைவரை போலீசார் சடலமாக மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், 64; கார் டிரைவர். இவர் கடந்த, 11 காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர்? வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காணாமல் போன நடராஜனின் உடல், பொத்தனூர் காவிரியாற்றில் உள்ள புதருக்குள் அழுகிய நிலையில் கிடப்பதாக ப.வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததது. போலீசார் உடலை மீட்டு, மருத்துவர்களை வரவழைத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நடராஜன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ப.வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X