பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 333 பேர் கைது: 6,269 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Added : மே 18, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியது, கள்ளத்தனமாக மதுபானங்கள், கள்ளச்சாராயம், கள் விற்பனை செய்த, 333 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என, எஸ்.பி., அருளரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில், மார்ச், 24 முதல், ஊரடங்கு உத்தரவு நாமக்கல் மாவட்டத்தில் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்ச், 25 முதல், கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்தது, விற்பனை செய்ய வைத்திருந்தது, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது என, 307 வழக்குகள் பதிவு செய்து, 333 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 12 ஆயிரத்து, 928 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 516 லிட்டர் கள், 308 லிட்டர் சாராயம், 6,269 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய, 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே, சிலர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி குடிப்பதும், விற்பதும் தெரியவந்தது. அதையடுத்து, 101 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 'யுடியூப்' மூலம் சாராயம் காய்ச்சும் விதத்தை பார்த்துவிட்டு, அவர்களது வீட்டிலேயே ஊறல் போட்டு, குக்கரில் சாராயம் காய்ச்சிய சிலரையும் கைது செய்துள்ளோம். தற்போது, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனை செய்வதும் என, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X