சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை பணி செய்ய விடமால் தடுத்த மூன்று இளைஞர்கள் கைது

Added : மே 18, 2020
Share
Advertisement

ப.வேலூர்: ப.வேலூரில், மதுபான கடையில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ப.வேலூர், சிவா தியேட்டர் கார்னரில் டாஸ்மாக் கடை உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவு நாளான நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் வரிசையில் வந்து சமூக இடைவெளியுடன் மதுபானங்களை வாங்கிச்சென்றனர். இதில் முக கவசம் அணியாமல் வந்த நபர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. நேற்று மாலை, 4:00 மணியளவில் மூன்று இளைஞர்கள் முக கவசம் அணியாமல் மதுபானங்களை வாங்க வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பாலசுப்பிரமணியம், ஊர்க்காவல்படையை சேர்ந்த நாகராஜ் ஆகிய இருவரும், அந்த மூன்று இளைஞர்களையும் முக கவசம் அணிந்து பின்னர், மதுபானங்களை வாங்கிச்செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் ஏற்கனவே போதையில் இருந்த, மூன்று இளைஞர்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணி செய்ய விடாமல் தடுத்தனர். அதையடுத்து ப.வேலூரை சேர்ந்த பிரகாஷ், 27, சேலூர் சாணார்பாளையத்தை சேர்ந்த பிரஷாந்த், 26, பிரவீன், 23, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X