சாலையோர குப்பை அகற்றப்படுமா?

Added : மே 18, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: மோர்பாளையத்தில், சாலையோரத்தில் உள்ள குப்பை கழிவால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மல்லசமுத்திரம் அடுத்த, மோர்பாளையத்தில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் சாலையின் ஓரத்தில், பல நாட்களாக குப்பை கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்வோர், மூக்கை மூடியபடியே செல்கின்றனர். தற்சமயம், கொரோனா தொற்று பரவிவரும் சமயத்தில், குப்பையை அகற்றாமல் உள்ளதால் மக்கள் கடும் விரக்தியில் உள்ளனர். குப்பை அகற்ற சுகாதாரத்துறை, பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X