பொது செய்தி

தமிழ்நாடு

புதுமண தம்பதியர் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு உணவு பொருள் வழங்கல்

Added : மே 18, 2020
Share
Advertisement

குளித்தலை: இரும்பூதிப்பட்டி, இலங்கை தமிழர் முகாமில், கரூர் புதுமண தம்பதியர் சார்பில், உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டியில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இங்கு, 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். கரூர், மண்மங்கலத்தை சேர்ந்த சட்ட விழிப்புணர்வு இயக்க உறுப்பினர் சிவக்குமார், குளித்தலை புனவாசிப்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி ஆகியோருக்கு மார்ச், 30ல் அய்யர்மலை கோவிலில் திருமணம் நடந்தது. கொரோனா ஊரடங்கால், உறவினர்கள், ஊரார்களுக்கு உணவு வழங்கமுடியாமல் போனது.மேலும் உறவினர், பெரியோர் நேரில் ஆசீர்வாதம் செய்ய முடியவில்லை. இதையடுத்து, ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை, புதுமண தம்பதியர் முன்னிலையில், குளித்தலை டி.எஸ்.பி.,கும்மராஜா, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகாமுனி ஆகியோர், இரண்டு பைகளில் அரிசி மற்றும் மளிகை பொருட்களை இலங்கை தமிழ் மக்களுக்கு வழங்கினர். ஆர்.ஐ., ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர், போலீசார், தம்பதியரின் உறவினர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், கரூர் ராயனூர் இலங்கை தமிழர் முகாம், மாயனூர் மனவாசி யில் வசித்து வரும் திருநங்கைகளுக்கும், உணவு பொருள் தொகுப்பினை புதுமண தம்பதியர் வழங்கினர். உணவு பொருட்கள் பெற்ற பொது மக்கள், திருநங்கைகள் புதுமண தம்பதிகள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X