பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ கல்லூரி சாலையில் டாஸ்மாக்: கொரோனா தொற்று பரவும் ஆபத்து

Added : மே 18, 2020
Share
Advertisement

கரூர்: கரூர், மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாலையில், டாஸ்மாக் கடை இயங்குவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
கரூர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு, 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் காணப்படும். தற்போது, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை செல்லும் வழியில், ராமனூரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக, ராமனூர் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய போதும், டாஸ்மாக் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. கடந்த மார்ச் முதல், காந்திகிராமத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட தொடங்கி உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் நுழைவாயில் சாலையில், டாஸ்மாக் கடை இயங்குகிறது. கரூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து வரும் டாக்டர், செவிலியர், பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இந்த சாலை வழியே செல்ல, இடையூறுகளை சந்திக்க வேண்டி உள்ளது. தற்போது, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு பின் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, ஏராளமானவர்கள் மது வாங்க வருகின்றனர். பார் விடுமுறையாக இருப்பதால், குடிமகன்கள் சாலை, காலி மனைகளில் நின்று மது அருந்துகின்றனர். வரும் காலத்தில், வழிப்பறி, குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. டாஸ்மாக் மற்றும் மருத்துவமனைக்கு அதிகளவில் கூட்டம் வந்து செல்வதால், கொரோனா தொற்று பரவ ஏதுவாக அமையும். அனைவரின் நலன் கருதி, டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X