கரூர்: கரூர் அருகே, நெரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கோரை புல் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இதை தவிர, நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்களும் பயிரிடப்படுகிறது. இதற்காக, காவிரியாற்றில் இருந்து பாசனத்துக்காக, கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால், பெரும்பாலான இடங்களில் கிளை வாய்க்கால்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாய்க்கால்களில் முட்புதர்களும் அதிகளவில் உள்ளது. இதனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், நெரூர் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE