குப்பைக்கு வைக்கப்படும் தீயால் மக்கள் அவதி

Added : மே 18, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே, வாங்கலில் கொட்டப்படும் குப்பையில் வைக்கப்படும் தீயால், அப்பகுதியில் பெரும் புகை மண்டலம் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் அருகே வாங்கலில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் செல்லும் சாலையில் துணை சுகாதார நிலையம், ரேஷன் கடை மற்றும் கால்நடை மருத்துவமனை ஆகியவை உள்ளன. இந்நிலையில், கால்நடை மருத்துவமனைக்கு அருகில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பையை முழுமையாக அகற்றாமல், தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் பெரும் புகையாக உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் புகையில் சிக்கி அவதிப்படுகின்றனர். குப்பைக்கு தீ வைத்து எரிப்பதை தவிர்த்து, முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X