கரூரில் சேதமடைந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் வீடுகள்

Added : மே 18, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் சேதமடைந்த நிலையில், நகராட்சி தூய்மை பணியாளர்களின் வீடுகள் உள்ளன. இதனால், அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.
கரூர் நகராட்சி தலைவராக, பெத்தாச்சி செட்டியார் என்பவர் பொறுப்பில் இருந்த போது கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன் வெங்கமேடு சாலையில், சர்ச் கார்னர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். இதில், தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர், 500 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், பழுதடைந்துள்ளது. இதனால், தூய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் வீடுகளில் வசிக்கின்றனர்.

இதுகுறித்து, தூய்மை பணியாளர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக, வீடுகளை பராமரித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும், வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, மழை காலங்களில் வீடுகளில் ஒழுகிய வண்ணம் இருக்கும். இரவு நேரத்தில் தூங்க முடியாது. குழந்தைகளுடன் வசிக்க முடியவில்லை. கரூர் நகராட்சி நிர்வாகம், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கரூரில் தூய்மை பணியாளர்களுக்காக, கட்டப்பட்ட வீடுகளின் நிலை பரிதாபமாக உள்ளது. மேலும், கரூரில் தற்போது மழை பெய்து வருவதால், வீடுகளை பராமரித்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X