மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்றலாமே

Added : மே 18, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் செடி, கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளன. கரூர் நகராட்சி பகுதிகளான வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, திருமாநிலையூர், திருகாம்புலியூர், செல்லாண்டிபாளையம், காந்திகிராமம், கொளந்தானூர், ராயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல இடங்களில் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் செடி, கொடிகள் அதிகளவில் படர்ந்துள்ளன. இதனால், மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர். இந்நிலையில், தென் மேற்கு பருவமழை விரைவில் துவங்கவுள்ளது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், காற்றுடன் மழை பெய்து வருகிறது. அப்போது, மின் கம்பங்களில் உள்ள செடி, கொடிகள் மூலம், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. பொதுமக்கள் கோடைக்காலத்தில், மின் தடை ஏற்படும் பட்சத்தில் கடும் அவதிப்படுகின்றனர். இதனால், பருவ மழை தீவிரமடையும் முன், மின் கம்பங்களில் உள்ள செடிகளை அகற்ற வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X