பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய முதல்வர் எதிர்ப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
tamil nadu, tn news, tamil nadu news, dinamalar news, விவசாயிகள், இலவசமின்சாரம், மத்தியஅரசு, முதல்வர் இபிஎஸ், முதல்வர்பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, மாநிலஅரசு, கடன்வரம்பு,

சென்னை: விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் இ.பி.எஸ்., எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும். மானியத்தை வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கே வேண்டும்.


பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். “விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் கொடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய கூடாது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும். மாநில அரசின் கடன் வரம்பு குறைப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என எடப்பாடி கேட்டுக் கொண்டுள்ளார். கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் கடன் உதவியை முதல்வர் வழங்கினார். துணை முதல்வர் ஓ.பி.எஸ் கலந்து கொண்டார்.

latest tamil news100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். மத்திய அரசின் புதிய பொருளாதார திட்டங்கள் வளர்ச்சிக்கு வித்திடும் எனு நம்புகிறேன். மாநில அரசின் கடன் வரம்பு குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.


கடனுதவி

இதனிடையே, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் கடன் உதவியை முதல்வர் வழங்கினார். இடைநிலை மூலதன கடனுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கலந்து கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - ..,இந்தியா
18-மே-202021:34:19 IST Report Abuse
Indian இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் நமது நாட்டில் அனைத்திலும் பிரிவு இவற்றில் சாதி, மதம், மொழி, ஆனால் மான்யம் என்று வரும்போது ஏழை , பணக்காரன் என்று வித்தியாசம் இல்லை. வரி போட்டால் குற்றம், வரி வசூலிப்பதில் மெத்தனம். நிர்வாகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். அரசாங்க வேலை என்றாலே secured வேலை என்ற நிலைமை மாற வேண்டும். மான்யம் ஒரு சாமானிய விவசாயிக்கு கிடைக்கும் பட்சத்தில் யாரும் தடை கிடையாது. இந்தியாவில் பண பரிமாற்றத்தில் உள்ள சீர்கேடுகளை களையவேண்டும். உலகத்திற்கே மென்பொருளில் தலைமை வகிக்கும் நாம் , நமக்கென்று ஒரு சரியான புள்ளி விவரம் கிடையாது. உணவகங்களில் கட்டாயமாக இலையில் தான் பரிமாறவேண்டும் endra நிலை வந்தால் , தண்ணீரை சேமிக்கமுடியும்.
Rate this:
Cancel
Sapere Aude -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-202019:54:34 IST Report Abuse
Sapere Aude திரு பழனிச்சாமி முதலில் தான் ஒரு விவசாயி பிற்பாடு தான் முதன் மந்திரி என சொல்லாமல் சொல்லுகிறார். விவசாயிதான் இயற்கையுடன் இணைந்து மக்களுக்காக உழைக்கிறான். மற்றெல்லோரும் அவன் பின்னே தொழுதுண்டு பின் செல்வதே முறை.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202021:03:52 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்உங்க கமிஷன் குறையாதுன்னு அதானி சொல்லிட்டா விவசாயி காணாம பூடுவான்....
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
18-மே-202019:21:53 IST Report Abuse
Rpalnivelu // வணக்கம் இங்கே பதிவு செய்பவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு உண்மையான நிலவரம் தெரியவில்லை.//7 உண்மையான நிலவரம் தெரிந்ததால்தான் சொல்கிறோம். கட்டு எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான் இந்த அடாவடி நடந்தது. அதாவது அப்போதைய விவசாய சங்க தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடையவை தூண்டி கலவரம் நடத்தி இதை கொடுக்க எம்ஜியாரை பணிய வைத்தனர். ஏமாந்தது நாராயணசாமி குளிர்காய்ந்தது கட்டுமரம் அன்று வீழ்ந்த தமிழக மின்சார துறை இன்று வரை தலை நிமிரவில்லை 1978வருடம் நடந்த நிகழ்ச்சி குள்ளநரித்தனம் அன்று வென்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X