விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய முதல்வர் எதிர்ப்பு| TN opposes changes in Electricity Act | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய முதல்வர் எதிர்ப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (37)
Share
tamil nadu, tn news, tamil nadu news, dinamalar news, விவசாயிகள், இலவசமின்சாரம், மத்தியஅரசு, முதல்வர் இபிஎஸ், முதல்வர்பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, மாநிலஅரசு, கடன்வரம்பு,

சென்னை: விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் இ.பி.எஸ்., எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும். மானியத்தை வழங்குவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கே வேண்டும்.


latest tamil news


100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். மத்திய அரசின் புதிய பொருளாதார திட்டங்கள் வளர்ச்சிக்கு வித்திடும் எனு நம்புகிறேன். மாநில அரசின் கடன் வரம்பு குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.


கடனுதவி

இதனிடையே, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் கடன் உதவியை முதல்வர் வழங்கினார். இடைநிலை மூலதன கடனுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கலந்து கொண்டார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X