கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களை திறக்ககோரிய மனு தள்ளுபடி

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களை திறக்ககோரிய மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பான உத்தரவில் மத வழிபாட்டு தலங்களை மூடவும், சமய சம்பிரதாய விழாக்களில் பங்கேற்கும் நபர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன .latest tamil newsஇந்நிலையில் 50 நாட்களுக்கும் மேலான ஊரடங்கில் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டன. வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மத வழிபாட்டு தலங்கள் மூடுவது, பஸ், ரயில் போக்குவரத்து தொடர்பாக இன்னும் தளர்வுகள் வரவில்லை.


latest tamil news


இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஜலீல் என்பவர் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோரினார். இதற்கு அரசு அளித்த பதிலில்; மத்திய அரசு இது தொடர்பாக தளர்வுகள் இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் வழிபாட்டு தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. இதற்கென பணியில் ஈடுபடுத்த போதிய போலீசார் இல்லை. இதனால் வழிபாட்டு தலங்களை திறக்க முடியாது என தெரிவித்தது. இதனையடுத்து தொடரப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
18-மே-202022:26:17 IST Report Abuse
kumzi வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளித்தால் மீண்டும் தப்ளிக் மாநாடு போன்ற சம்பவம் நடக்க மிகவும் வாய்ப்பு இருக்கிறது மூர்க்கனை நம்ப கூடாது
Rate this:
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
18-மே-202020:10:20 IST Report Abuse
Rajinikanth அப்போ டாஸ்மாக்கை மட்டும் திறந்தால் கொரோனா பரவாதுங்களா அய்யா நீதிமான்களே ..கூட்டம் சேரக்கூடாது என்பது தானுங்களே ஊரடங்கு சட்டத்தின் நோக்கம் ?..டாஸ்மாக்கில் கூடும் கூட்டத்தால் மட்டும் கொரோனா பரவாதுங்களா சட்ட மேதைகளே..? ஊரடங்கை விடுங்க ..முதலில் உங்க உளுத்துப்போன சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைங்க எசமான்களே ..கொத்து கொத்தாய் மக்கள் சாகும் இந்த நேரத்துல குடி மையங்கள் அவசியங்களா தேவ தூதர்களே..?நாடாளுபவர்கள் சரி இல்லை என்றால் நாசமா போன மக்கள் எல்லாம் நீதி கேட்டு உங்க கிட்டேதானே வருவாங்க ..நீங்களே அவங்களுக்கு துணை போனா..சரி தவறு என்பதெல்லாம் வாதாடுவோரின் திறமையை பொறுத்ததுதான் என்றால் அநியாயத்துக்கு துணை போகிற மாதிரி ஆகிடாதுங்களா அய்யா ..?உங்களுக்குன்னு தனிப்பட்ட மனசாட்சின்னு ஒண்ணு கிடையவே கிடையாதுங்களா அய்யா ..? டாஸ்மாக்கை திறக்கும் விஷயத்தில் ஒரு கடுகளவாவது கடுமை காட்ட முடியாதுங்களா உங்களால ...ஒன்றிரண்டு பேர் பொதுநலன் கருதி வழக்கு போட்டால் அவர்களது முகத்தில் கரி பூசிவிட்டு அநியாயக்காரர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்த உங்கள் மீதான எங்களின் மதிப்பும் மரியாதையும் கூடுமென்று சர்வ நிச்சயமாக நம்புகிறீர்களா அய்யாமார்களே ...?ஐயாக்களே ...ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன் ,,இடிப்பார் இல்லா ஏமறா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும் ...
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
18-மே-202019:53:30 IST Report Abuse
Sivak எதன் அடிப்படையில் டாஸ்மாக் திறப்பதும் வழிபாட்டு தளங்களை திறப்பதும் சேர்த்து பேசுகிறார்கள் ...?? அடிப்படை அறிவு கிடையாதா?
Rate this:
Pandianpillai Pandi - chennai,இந்தியா
18-மே-202021:08:54 IST Report Abuse
Pandianpillai Pandiமன அமைதிக்காதான். இருதரப்பும் செல்வது அதற்குத்தானே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X