பொது செய்தி

இந்தியா

கர்நாடகா, கேரளாவில் பஸ்களை இயக்க அனுமதி; தமிழக கிராமங்களில் சலூன் திறப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகா, கேரளாவில் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.



latest tamil news




தமிழகத்தில் சலூன் கடைகள் திறப்பு


நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது .மேலும் தேவையை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள் முடிவுகள் எடுத்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது . இதனையடுத்து தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் கிராமப்பகுதிகளில் சலூன்கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க கூடாது என்று கூறியுள்ளது.


latest tamil news



இது போல் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று அளித்த பேட்டியில் ; அரசு, தனியார் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கேரளாவிலும் பஸ்கள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அத்தியாவசியம் இல்லாத பொருட்களையும் ஆன்லைனில் விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
18-மே-202020:02:29 IST Report Abuse
S. Narayanan தமிழ் நாட்டில் விரைவில் பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு ,இந்தியா
18-மே-202019:59:21 IST Report Abuse
NicoleThomson என்னவோ நடக்குது புரியலை
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
18-மே-202017:42:24 IST Report Abuse
sundarsvpr நல்ல முடிவு. சவரம் செய்திட உபயோகம் செய்திடும் சோப்பு கத்தி வாடிக்கையாளர் படிக்க வைக்கும் செய்தித்தாள் இவைகளுக்கு விதிமுறை தேவையெனின் அதனையும் கருத்தில்கொள்ளவேண்டும். சவரம் செய்தவர்கள் முழுவிபரம் பதிதல் தேவையா என்பதும் அரசு கூறவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X