பொது செய்தி

இந்தியா

பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு: காரணம் கொரோனா தடுப்பு பணி

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா இந்தியாவிலும் பரவ துவங்கிய போது, பொருளாதார ரீதியாக நமது நாடு சில பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா தடுப்பு பணிகளால் பிரதமர் மோடி மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இது குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:சமீப நாட்களில் நடந்த கருத்து
பிரதமர்மோடி,நரேந்திரமோடி,  நரேந்திரமோடி, மோடி, செல்வாக்கு, கொரோனா, கொரோனாவைரஸ், PM Modi, Prime Minister, Narendra Modi, India, Delhi, US President, Donald Trump, Russian President, Putin, covid-19, coronavirus, corona, corona outbreak, corona updates, corona news, corona  cases, corona control, covid-19 pandemic

புதுடில்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா இந்தியாவிலும் பரவ துவங்கிய போது, பொருளாதார ரீதியாக நமது நாடு சில பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா தடுப்பு பணிகளால் பிரதமர் மோடி மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:
சமீப நாட்களில் நடந்த கருத்து கணிப்புகளில் பிரதமர் மோடி மீதான நம்பிக்கை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினை ஒப்பிடுகையில், பிரதமர் மோடி , கொரோனா நெருக்கடியை சிறப்பாக கையாண்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா பிரச்னையை சரியாக கையாண்டு, இந்தியாவை விட்டு அகற்றும் போது, மோடியின் செல்வாக்கும், புகழும் இன்னும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், பாகிஸ்தான் குறித்த கொள்கைகள் காரணமாக மோடிக்கு வெற்றியை தேடி தந்தது. அதேபோல், இந்த கொரோனா வைரசும், மோடியின் நீடித்த செல்வாக்கு குறித்த கவலைகள் பலருக்கு இருந்தபோதிலும் பல இந்தியர்களை அவரது பக்கம் கொண்டு வந்துள்ளது.
மோடி, மக்களை ஒன்று சேர்ப்பவராக தான் பார்க்கப்படுகிறார். இதனால், தான், தேசிய அளவில் ஊரடங்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட போதும், மக்கள் அதற்கு அமைதியாக கீழ்படித்தனர். வீட்டு வாசலில் நின்று விளக்கு ஏற்க வேண்டும். கைகளை தட்ட வேண்டும் என சொன்னவுடன், கோடிக்கணக்கான மக்கள் அவ்வாறு செய்தனர் .

ஸ்ரீராம் சவுலியா என்ற நிபுணர் கூறுகையில் , இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த காலத்தில், உலகின் மிகக்கடுமையான ஊரடங்கை அமல்படுத்திய மோடி, மற்ற நாட்டு தலைவர்களை விட சிறப்பாக செயல்பட்டார். மக்கள் உயிருடன் இருந்தால் உலகம் இயங்கும் என பொருள்படும் வகையில் அவர் எழுப்பிய கோஷம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. என்றார்.


latest tamil news


அதேநேரத்தில் இனி வரும் நாட்கள் சற்று கடினமானதாக தான் இருக்கும். 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், கொரோனா பாதிப்பை 96 ஆயிரம் பேர்;3,100 பேர் மரணம் என்ற அறவில் வைத்துள்ளது என்பது அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் குறைவுதான். மற்ற நாடுகளை காட்டிலும், இங்கு குறைவான பரிசோதனை நடத்தப்பட்டாலும், உண்மையான தகவலை மோடி அரசு மறைக்கிறது என்பதை எந்த சுகாதார நிபுணர்களும் நம்பவில்லை. இதனால், பெரும்பாலான இந்தியர்கள் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றனர்.

கோவாவை சேர்ந்த கப்பல் கட்டும் தளத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி கூறுகையில் , மோடி மட்டும் இல்லாவிட்டால், நாட்டில் இந்நேரம் மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகளில் இடம் இல்லாமல் நிறைந்திருக்கும். சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும், மோடியின் திறன் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால், தற்போது நாங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறோம் என்கிறார். இதே கருத்து தான், பல நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பல நாட்டு தலைவர்களை விட மோடி சிறப்பாக செயல்பட்டுள்ளார். டிரம்ப், புடின், ஏஞ்சலா மெர்கல், போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களை விட மோடியின் செல்வாக்கு 80 சதவீதம் அதிகரித்துள்ளது எனக்கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய கருத்து கணிப்பில், கொரோனா வைரஸ் பிரச்னையை மோடி சிறப்பாக கையாள்வதாக 93.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
18-மே-202022:17:09 IST Report Abuse
Rajas சர்வே என்று சொல்லிக்கொண்டு அதை வாரம் ஒரு முறை வெளியிடுவதால் எதையும் ஞாபகத்திற்கு வைத்து கொள்ள முடியவில்லை. ஆகவே அடுத்த ஒரு வருடத்திற்கு சேர்த்து இப்போதே வெளியிட்டால் நல்லது.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
18-மே-202022:09:49 IST Report Abuse
Rajas உலகம் முழுவதும் ஊரடங்கு இருக்கிறது. மக்கள் வெளியே வர முடியவில்லை. இந்தியாவிலும் நிலைமை அதுவே. அப்புறம் எப்படி சர்வே எடுத்தார்கள். சில பத்திரிகைகளில் படிக்கும் போது ஒரு பாப் அப் வரும் அது தான் இந்த சர்வே போலிருக்கிறது. இந்த மார்னிங் கன்சல்ட் எடுக்கும் சர்வே எல்லாம் வெறும் 4000 -4500 பேரிடம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-மே-202021:29:08 IST Report Abuse
Natarajan Ramanathan அமெரிக்கா ரஷ்யா இங்கிலாந்து இத்தாலி ஜெர்மனி ஸ்பெயின் பிரேசில் உள்பட கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சுமார் 47 நாடுகளின் மக்கள்தொகையை விட அதிக மக்கள்தொகை உடையநாடு இந்தியா. இதை இந்த அளவுக்கு சிறப்பாக வைத்திருப்பதே சாதனைதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X