'கொரோனாவின் தோற்றம் குறித்து விசாரிக்க இது நேரமில்லை': சீனா சர்ச்சை கருத்து

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

பீஜிங்: இன்று நடக்கும் உலக சுகாதாரக் கூட்டத்தில், கொரோனா குறித்து விவாதிக்கவுள்ள நிலையில், 'கொரோனா தோன்றியது மற்றும் பரவியது குறித்து விசாரணை செய்ய இது நேரமில்லை' என, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது.



latest tamil news



கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலக அளவில் இதுவரை, 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில், 18.60 லட்சம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்; 316,732 பேர் உயிரிழந்துள்ளனர் என, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.


latest tamil news



கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனா தான் காரணம் என, பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் 73வது, 'உலக சுகாதார கூட்டம்' இன்று (மே 18) நடக்கிறது. ஆன்லைனில் நடக்கும் இந்த கூட்டத்தில், 'கொரோனா வைரஸ் எப்படி ஆரம்பித்தது மற்றும் பரவியது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் கொண்டுவரவுள்ளன. இந்த தீர்மானத்திற்கு இதுவரை, 116 நாடுகள் ஆதரவளித்துள்ளன. மொத்தம் 194 உறுப்பினர்கள் உள்ள இந்த அவையில், இத்தீர்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.



latest tamil news



இந்தக் கூட்டத்தில், சீன அதிபர் ஜி ஜின் பிங் உரையாற்றவுள்ள நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான ஜாவ் லிஜான், 'இன்னும் பல நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் முடியவில்லை. எனவே, கொரோனா வைரஸ் தோன்றியது மற்றும் பரவியது குறித்து ஆராய்ச்சி செய்ய இது நேரமில்லை. தற்போது இந்த விசாரணையை நடத்துவது மிகவும் முன்கூட்டியே நடத்துவது போலாகும்' எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நிலைப்பாட்டிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 'கொரோனா விவகாரத்தில் சீனா தான் தவறு செய்துள்ளது. அதனால்தான் விசாரணை நடத்தக்கூடாது என வலியுறுத்துகிறது' எனச் சிலர் விமர்சிக்கத் துவங்கியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
23-மே-202017:01:55 IST Report Abuse
madhavan rajan கொரோனான் தோற்றம் குறித்து விசாரிக்கவேண்டாம். சீனாவின் துரோகம் குறித்து விசாரிப்போமா?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
18-மே-202022:05:13 IST Report Abuse
madhavan rajan உலகம் முழுவதற்கும் துவக்கம் வூஹானில். இப்போது விசாரிக்கக்கூடாது என்றால் எப்போது விசாரிக்க வேண்டும்?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
18-மே-202021:39:03 IST Report Abuse
konanki உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவிற்கு பெரிய ஆப்பு அடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X