ஈரான் கப்பல்களை சீண்டும் அமெரிக்கா; ஐ.நா.,விடம் சென்றது விவகாரம் | Iran complains to U.N over U.S. threat on Venezuela shipment | Dinamalar

ஈரான் கப்பல்களை சீண்டும் அமெரிக்கா; ஐ.நா.,விடம் சென்றது விவகாரம்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share
U.N, United Nations, Tehran,  Washington, Iranian fuel shipment, Venezuela, U.S. President, Donald Trump, America, Iran, Iranian Foreign Minister, Mohammad Javad Zarif, U.N. Secretary-General, Antonio Guterres, .ஐ.நா,ஐக்கிய நாடுகள் அவை, ஈரான், அமெரிக்கா, கப்பல்,

டெஹ்ரான்: ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் அடிக்கடி கப்பல் போக்குவரத்தில் சண்டை ஏற்பட்டு வருகிறது. வெனிசுலாவுக்குப் போகும் ஈரானிய எரிபொருட்கள் அடங்கிய கப்பலை சீண்டிப்பார்க்க அமெரிக்க படைகள், ஈரானிய கப்பல்படையை அடிக்கடி தொந்தரவு செய்கிறது.

இது தொடர்ந்தால் அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்குமென ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த ஞாயிறன்று வெனிசுலாவை நோக்கி ஐந்து ஈரானிய கப்பல்கள் சென்றுகொண்டு இருந்தது. அவற்றில் 10 மில்லியன் டாலர் மதிப்பிள்ள எரிபொருட்கள் நிரம்பி இருந்தன. இவற்றை வெனிசுலாவுக்கு செல்ல அனுமதிக்காமல் திடீரென அமெரிக்க கப்பற்படை தடை செய்தது. இது இரு நாடுகளுக்கு இடையே உள்ள மோதலை பெரிதாக்கி உள்ளது.


latest tamil news


அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் அடிக்கடி கப்பல் போக்குவரத்தில் இவ்வாறு மோதல் போக்கு நீடித்து வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் பெட்ரோல், டீசல் என பிரிக்கப்பட்டு ஈரானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரான் அமெரிக்கா எல்லைகள் நெருங்கி உள்ள பகுதியில் குறுகலான கடல்பகுதி உள்ளது. இதில் ஈரானிய மற்றும் அமெரிக்க கப்பல்கள் செல்லும்போது கடற்படையினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருவது வாடிக்கை ஆகி விட்டது.

இதுதொடர்பாக ஐநா தலைவர் அண்டோனியோ கட்டர்ஸுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவத் சரீப் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் அமெரிக்க கடற்படை ஈரானிய எரிபொருள் அடங்கிய கப்பல்கள் போக்குவரத்தை அடிக்கடி சீண்டுவதாகவும் இதற்கு ஐநா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என ஐநா உறுதி அளித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X