பொருளாதார திட்டத்தின் மதிப்பு: சிதம்பரம் புதுக்கணக்கு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு அறிவித்த ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் உண்மையான மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடி தான் என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் புதுக்கணக்கு போட்டுள்ளார்.கொரோனா வைரஸ் பிரச்னையால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, நிதியமைச்சர் நிர்மலா
Chidambaram, Economic Package, Nirmala, Relief Package, Congress, Economy, Indian economy, Politics, central government, Nirmala sitharaman, Finance Minister,  coronavirus pandemic, stimulus package, Atmanirbhar Bharat campaign, Covid-19 economic package, india, economy, corona, coronavirus, சிதம்பரம், பொருளாதாரம், திட்டம், மதிப்பு, நிதியமைச்சர், நிர்மலாசீதாராமன்

புதுடில்லி: மத்திய அரசு அறிவித்த ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் உண்மையான மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடி தான் என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் புதுக்கணக்கு போட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்னையால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு கட்டங்களாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மொத்தம் ரூ.20,97,053 கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டத்தினை அறிவித்தார். அதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு, விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி போன்ற பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றன.


latest tamil news


இந்நிலையில், நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளை காங்., எம்பி.,யும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான். ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
19-மே-202004:17:32 IST Report Abuse
Rajesh ஏழைகளின் பணம் திருடினவங்க [அரசியல் வாதி உட்பட] அவனோட வம்சம் விளங்கினதா பார்த்தீர்களா? சும்மா அசை போட்டு பார்க்கவும்.........
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
18-மே-202023:43:52 IST Report Abuse
Rajas கொரானாவிற்கு 20 லட்சம் கோடி என்று பிரதமர் அறிவித்தது 12 மே 2020 அதாவது மே 12 க்கு பின் 20 லட்சம் கோடி நிவாரணம் என்று அரசு அறிவித்தது. ஆனால் அதற்க்கு முன்பாக RBI பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8.04 லட்சம் கோடியை அறிவித்தது. அதன் பின் நிதி அமைச்சர் மார்ச் 27 ல் 1.70 லட்சம் கோடியை நிவாரணமாக அறிவித்தார். இந்த இரண்டையும் கழித்தால் மிச்சம் வருவது 10.26 லட்சம் கோடி. பிப்ரவரி 1 அன்று பட்ஜெட்டில் பல சலுகைகளை அறிவித்தார்கள். அதையும் கழித்து விட்டதால் மிச்சம் என்ன வருகிறது. இது தவறு என்றால் இன்னொரு கணக்கும் உண்டு. இந்த வருட பட்ஜெட்டில் செலவு தொகை 30.42 லட்சம் கோடி. (அதாவது கொரானாவிற்கு முன் செலவு தொகை). இப்போது அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடி செலவு மட்டுமே என்றால் அதற்க்கு என்ன வரவு இருக்கிறது என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
18-மே-202023:03:59 IST Report Abuse
Rajas கொரநா நிவாரணத்திற்கும் பொது துறையை தனியார் மயமாக்குதலுக்கும் என்ன சம்பந்தம். தெரிந்தால் சொல்லவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X