'கொரோனா அலை ஓய்ந்தபின் விசாரணையை துவக்குங்க': சீன அதிபர்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

ஜெனிவா: 'கொரோனா விவகாரத்தில், ஆரம்பம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி வருகிறோம். கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தபின், அது குறித்த விசாரணையைத் துவக்குங்கள்' என, சீன அதிபர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



உலக சுகாதார அமைப்பின், 73வது உலக சுகாதார கூட்டம் இன்று துவங்கியுள்ளது. இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் ஆரம்பம் முதலே நாங்கள், வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்றி வருகிறோம்.


latest tamil news



கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் தான், எவ்வாறு அது தோன்றியது, பரவியது, கையாளப்பட்டது என, உலக அளவில் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். இந்த விசாரணை பாரபட்சமின்றி நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், 'கொரோனா நோய்த்தொற்றின் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பாக, சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்' என, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகளும் வலியுறுத்தியுள்ள நிலையில், சீன அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
19-மே-202021:01:23 IST Report Abuse
mohan இது ஒரு உலகளாவிய ஏற்பாடு... யாரும், யாரையும், காட்டி கொடுக்க மாட்டார்கள்....ஊதாரி மக்கள் , இனிமேலும், பொறுப்புடன் இருப்பார்களா.. இருக்கமாட்டார்கள்...அதனால் தன எல்லாம்....இந்தியா சாராய கடைகளின் பின்னால் பெண்கள் இப்படி அலைந்தால்... கலியுகத்தின் உச்ச கட்டம்... ஆதிக்க சக்திகளின் செயல்... இன்னும் பல...முதலில் மக்கள் உணர்ந்து மக்கள் தொகை கட்டு பாட்டை வைத்திருக்கவும்.. ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும்.... உலக ஓநாய்கள், நேர்மையான மக்களை வாரிசு வேண்டும் என்கின்ற போர்வையில் முட்டாளாக பார்க்கும்.. இன்று நீங்கள் முடிவெடுங்கள்..ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரிசு போதும் என்று...
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
19-மே-202015:36:38 IST Report Abuse
madhavan rajan அலை முழுதும் ஓயாம பாத்துக்குறேன்னு சொல்லவரானோ?
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
19-மே-202012:37:12 IST Report Abuse
Tamilnesan உலக மக்கள் தொகை முக்கால்வாசி குறைந்தவுடன் விசாரணையை துவக்கலாம் என்கிறார் இவர். இதற்கு நம்மூர் உண்டியல் குலுக்கிகள் என்ன சொல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X