பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 11,760 பேருக்கு கொரோனா; 81 பேர் பலி

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, DeathToll, Discharge, CoronaVirus, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, பலி, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 18) மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆகவும், பலி எண்ணிக்கை 81 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று 536 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மட்டும் 46 பேர். இன்றைய பாதிப்பில் 304 ஆண்களும், 232 பெண்களும் உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 234 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் விகிதம் 37.46 ஆக உள்ளது. இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது உயிரிழப்பு விகிதம் 0.68 ஆக உள்ளது.


latest tamil news


தற்போது 7,270 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் பதற்றமடையவோ பயமடையவோ வேண்டாம்; கொரோனாவை எதிர்கொள்வதே முக்கியம். இந்தியாவிலேயே குறைந்த அளவிலான இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் உள்ளது. கொரோனா பரிசோதனைகளை குறைக்கவில்லை. ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இதுவரை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 3,22,508 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி யாரும் விடுபடாமல் சோதனை செய்யப்படுகிறது. சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-202001:35:06 IST Report Abuse
Tamilan சென்னையில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி மார்க்கெட்டு, ஆங்காங்கே உள்ள மசூதிகளிலேயே வைத்து உணவுபொருகள் விற்க ஏற்பாடு செய்திருந்தால் , கோயம்பேடு போன்ற இடங்களில் இருந்து பரவியதில் பாதியை குறைத்திருக்கலாம் . இதிலும், சிறுபான்மையினரை வைத்து அரசியல் செய்தது மற்றும் பலதரப்பட்ட விஷமிகளுடன் சேர்ந்து பிரச்சினை பெரிதாகிக்கொண்டே செல்கிறது .
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
20-மே-202001:26:58 IST Report Abuse
Kundalakesi To be frank no new testing done in most cities. Out districts travellers were advised to stay at home for 14 days but who's checking them? The govt is like giving treatment after disease spreads. We public has to stay inside as much as possible because the death counts are continuing day by day. We cant blame Govt but we're not following them and taking corona not seriously.
Rate this:
Cancel
THANARAJ ABRAHAM - delhi,இந்தியா
20-மே-202000:57:51 IST Report Abuse
THANARAJ ABRAHAM அண்டை மாநிலம் கேரளாவிற்கு மருத்துவர்கள் &அதிகாரிகளை அனுப்பி அங்கு எப்படி சிகிச்சை அளிக்கும் முறை பற்றி அறிந்து,அதைப் போல் தமிழ்நாட்டிலும் சிகிச்சை கொடுத்து குணமாக்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X