சொந்த ஊர் செல்ல 1.5 கி.மீ., தூரம் காத்திருக்கும் தொழிலாளர்கள்| Coronavirus Lockdown: Bus queue over 1.5 km long in Mumbai | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சொந்த ஊர் செல்ல 1.5 கி.மீ., தூரம் காத்திருக்கும் தொழிலாளர்கள்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (3)
Share
Bus, Queue, Mumbai, coronavirus, migrant workers, home, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, lockdown 4.0, curfew, social distancing, மஹாராஷ்டிரா, வெளிமாநிலதொழிலாளர், புலம்பெயர்தொழிலாளர்,  வரிசை, மத்தியபிரதேசம், மபி

தானே: மஹாராஷ்டிர மாநிலம் தானேயில், சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சில் பயணிக்க வெளிமாநில தொழிலாளர்கள் 1.5 கி.மீ., தூரம் காத்திருக்கின்றனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிராவில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி வருகின்றனர். அவர்களுக்கு மாநில அரசு சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது. அதில் பயணிக்க ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தொழிலாளர்கள் காண்பிக்க வேண்டும். ஒரு பஸ்சில் சமூக இடைவெளியை கடைபிடித்து 22 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

தானே மாவட்டத்தில் உள்ள இருந்து சொந்த ஊர் கிளம்பி வருகின்றனர். அவர்கள் பயணம் செய்ய, ஏற்பாடு செய்த பஸ்களில் பயணிக்க ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவ்வாறு அந்த வரிசை 1. 5 கி.மீ., தூரம் நீண்டுள்ளது. அப்படி நின்று நீண்ட நேரத்திற்கு பிறகே அவர்கள் பஸ்சில் பயணம் செய்ய முடிகிறது.


latest tamil newsஇது தொடர்பாக தொழிலாளி ஒருவர் கூறியதாவது: நேற்று நள்ளிரவு முதல் இங்கு காத்திருக்கிறேன். ஆனால், நீண்ட நேரமாகியும் சில மீட்டர்கள் தான் வரிசை நகர்ந்துள்ளது. நான் ம.பி., மாநிலம் ஜான்பூர் செல்ல வேண்டும். ஆனால், எல்லையிலேயே இறக்கிவிடப்படுவேன். அங்கிருந்து சொந்த கிராமத்திற்கு ம.பி., அரசு பஸ்வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X