ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்: மோடி டுவிட்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 PM, PM Modi, narendra modi, cyclone, cyclome amphan, safety, ministry of home affairs, MHA, National Disaster Management Authority, NDMA,  Bay of Bengal, Indian Meteorological Department, IMD

புதுடில்லி: ஆம்பன் புயல் பாதிப்பிலிருந்து ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வங்க கடலில் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'ஆம்பன்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு வங்க கடலின் மத்திய பகுதி தெற்கு பகுதியில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். வரும் 20ம் தேதி, மேற்கு வங்கம் - வங்கதேசத்தை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


latest tamil news
இந்நிலையில் ஆம்பன் புயல் பாதிப்பு குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் டுவிட்டரில் பதவிவேற்றியது, ஆம்பன் புயல் நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன், மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளும் மாநில அரசுகளுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
daniel - chennai,இந்தியா
19-மே-202014:38:39 IST Report Abuse
daniel ஐயா மோடி அவர்களே , எல்லா தொடர்வண்டிகளும் உங்கள் ஆட்சியின் கீழ் தான் உள்ளன .அதற்குரிய ஏற்பாடுகளை செய்யுங்கள் .முக்கால்வாசி மாநிலங்கள் உங்களின் கட்சியிடம் தான் உள்ளது .அவர்களுக்கு உணவு அளியுங்கள் .சிறு நேரம் மட்டும் பிரார்த்தனை செய்து விட்டு மீதம் நேரம் மக்களுக்கு சேவை செய்யுங்கள் .உங்களிடம் சுமார் 10 கோடி தொண்டர்கள் இருப்பதை இப்போதாவது சேவை செய்ய பயன்படுத்துங்கள் .
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
18-மே-202023:44:58 IST Report Abuse
Anandan ஒரு பிரதமர் இதைத்தான் செய்யமுடியும் பொருளாதார உதவிகள் எல்லாம் தங்கள் கட்சிக்கு உதவிய பெருநிறுவங்ககளுக்கு மட்டுமே. கேள்வி கேட்பவர்களை ரங்கு போன்ற பலரை வைத்து கேவலப்படுத்துவது இயல்பு.
Rate this:
Cancel
sharmilaagopu - mysore,இந்தியா
18-மே-202022:25:48 IST Report Abuse
sharmilaagopu கொரோனா காலத்தில் பாதிக்க பட்டவர்களை எல்லாம் கவனிதாயிற்று இப்போ அடுத்த ஐடியா? இதற்கும் மோடியா? ஏ...இயற்க்கையே மோடியின் காலத்திலேயே எல்லாம் வந்துவிட்டால் மக்கள் தாங்குவார்களா? பார் எங்கள் பிரதமராலேயே தங்க முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X