காற்றுக்கு சாய்ந்த வாழை மரங்கள்: விவசாயிகள் வேதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காற்றுக்கு சாய்ந்த வாழை மரங்கள்: விவசாயிகள் வேதனை

Added : மே 18, 2020
Share
காற்றுக்கு சாய்ந்த வாழை மரங்கள்: விவசாயிகள் வேதனை

பேரூர்: பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன், பூவன் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

கோவை, தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக, இலை வாழைகள் விற்பனையின்றி வீணாகி வருவதுடன், பல இடங்களில் நிலங்களுக்கு உரமாகியும் வருகின்றன. விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு, பலத்த காற்றுடன் மழை பெய்தது. அந்த மழைக்கு தாக்கு பிடிக்காமல், மாதம்பட்டி மற்றும் சென்னுாரில் பயிரிட்டிருந்த, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேந்திரம், பூவன் வாழை அடியோடு சாய்ந்து விழுந்தன. வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். விரைந்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ''ஊரடங்கு காரணமாக, இலை வாழை விற்பனையின்றி வீணாகியது. தற்போது, மழையால் நேந்திரன், பூவன் வாழை சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிவாரணம் கிடைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X