மும்பையில் இருந்து தெலுங்கானா திரும்பிய 2 பேருக்கு கொரோனா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement

ராஜன்னா - சிர்சில்லா : தெலுங்கானாவின் ராஜன்னா சிர்சில்லாவில் மும்பையில் இருந்து திரும்பிய 2 வெளி மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தெலுங்கானாவில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது. பல மாநிலங்களிலும் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ரயில்களி மூலம் அவர்களை அனுப்புகிறது. இந்நிலையில் தெலுங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் பலருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில், மும்பையில் இருந்து திரும்பிய வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் 45 வயதை கடந்தவர்கள். பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் சிர்சில்லாவின் சந்திரம்பள்ளி பகுதியை சேர்ந்தவர். மற்றொருவர் வெமுலவாடா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதனால் அம்மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராம மற்றும் நகர பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டனர். மேலும் அவர்களது குடும்பத்தாரையும் வீடுகளில் தனிமைப்படுத்தினர். மேலும் ஏப்., மாதத்தில் வெமுலவாடா பகுதியில் 3 இளைஞர்களுக்கு கொரோனா இருந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



தொடர்ந்து, கோவில் நகரங்களில் இருந்து 4 பேர் டில்லி மாநாட்டிற்கு சென்று, சிர்சில்லா மாவட்டத்திற்கு திரும்பியது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பங்கேற்று தெலுங்கானாவிற்குள் நுழைந்தவர்களை மாநில அரசு பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வருகிறது. பின் நோய் குணமடைந்து பலர் வீடு திரும்புகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X