பொது செய்தி

இந்தியா

டில்லியில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 10,000 த்தை தாண்டியுள்ளது.



latest tamil news



கடந்த 2 நாட்களாக 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலத்தில் 10,054 ஆக உள்ளது.இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழகத்தை தொடர்ந்து டில்லி நான்காம் இடத்தில் உள்ளது.


latest tamil news



கடந்த 30 நாட்களில் மட்டும் 8,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 160 பேர் பலியாகி உள்ளனர். 4,485 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் அனைவரும் கொரேனாவுடன் இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X