16,000 பேருக்கு உணவு வழங்கும் எமிரேட்ஸ் அறக்கட்டளை

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

துபாய் : கொரோனா பாதிப்புகளால் சிக்கி உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் போராடுபவர்களுக்கு உதவி செய்ய எமிரேட்ஸ் அறக்கட்டளை சில சமூக அமைப்புகளுடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் பல நகரங்களிலும் நோய் பரவலை தொடர்ந்து, பலரும் உணவு போன்ற அத்தியவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ பல தன்னார்வ அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அரபு எமிரேட்சில் ஏற்கனவே (PAD - Pakistan associatin of dubai) என்ற அமைப்பு , பல இடங்களிலும் தேடி சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த பலரும் உணவுகளை தயார் செய்து உணவு பொட்டலங்களாக கொடுத்து வருகின்றனர்.


latest tamil newsஇதையொட்டி, அரபு எமிரேட்ஸ் தனது அறக்கட்ளை , 'ரமலான் உணவு உதவி' ( 'Ramadan Food Aid' ) திட்டத்தால் பலருக்கு உதவ FAB ((First Abu Dhabi bank) மற்றும் Lulu Exchange போன்ற தன்னார்வலர்கள் அமைப்புடன் இணைந்து நகரின் பல்வேறு இட்ஙகளில் சுமார் 16000 பேருக்கு மேல் உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது.

இது தொடர்பாக அறக்கட்டளையின் தலைமைத் தளபதி மோகன்னா அல் மெய்ரி கூறுகையில், எமிரேட்ஸ் அறக்கட்டளை தனது தனியார் மற்றும் பொதுத்துறையின் முயற்சிகளை இணைத்து, அரபு எமிரேட்சில் கொரோனாவிற்கு மத்தியில், சமூகத்தை ஆதரிப்பதில் தனது பங்கை செலுத்துகிறது.


latest tamil newsதொடர்ந்து, UAE தொண்டர்களாகிய நாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர் களுக்கு தேவையான சிறு உதவிகளை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். நமது அமைப்பு தேசியத்தில், வலுவான அடித்தளம் அமைய, சமூகத்தில் உதவி செய்பவர்களின் மதிப்பை பிரதிபலிக்கும் என நம்புகிறோம். ஒரு தேசிய மட்டத்தில் தன்னார்வ முயற்சிகளை, இதுபோன்ற சூழ்நிலைகளில் சமூக உறுப்பினர்களை மற்றவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமாகவும், தேவைப்படுபவர்களுக்கு உதவ சரியான வாய்ப்புகளை வழங்குவதன் மூலமாகவும் வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


latest tamil newsமேலும் FAB இன் துணை தலைமை நிர்வாக அதிகாரி, ஹனா அல் ரோஸ்தமணி கூறியதாவது : “எங்கள் சமூகத்தில் இதுபோன்ற ஒரு முக்கியமான மனிதாபிமான முயற்சியை ஆதரிப்பதற்காக இந்த ஆண்டின் இந்த சிறப்பு நேரத்தில் எமிரேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பணிவுடன் இருக்கிறோம். நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பெரும்பகுதி சீர்குலைத்துள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலைகளில் மக்கள் ஒற்றுமையாக இருப்பது, நமது ஆதரவின் மூலம் அதிகம் பயனடையக்கூடியவர்களை அணுகுவது முன்னிருப்பதை விட முக்கியமானது. அனைவரையும் ஊக்குவிக்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
18-மே-202021:51:35 IST Report Abuse
sundarsvpr இது மாதிரி பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் எல்லா நாடுகளிலும் நாடுகளில் செய்கின்றன. அவைகளுக்கு நன்றி.. உதவி எதிர்பார்க்காமல் மக்கள் வாழவேண்டும் என்ற பிராத்தனை செய்தலும் கூடுதல் பலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X