மும்பை: மஹா சட்டேமேலவை உறுப்பினராக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்று கொண்டார்

மஹா முதல்வராக பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகி உள்ள நிலையில் உத்தவ் தாக்கரே மஹா சட்ட மேலவை உறுப்பினராக பதவி ஏற்றார். காங்., தேசியவாத காங்., கட்சிகளுடன் திடீர் கூட்டணி அமைத்து அதிகாரத்தை பிடித்த உத்தவ் தாக்கரே கடந்த நவ., 28 ம் தேதி மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.

சட்டப்பேரவையின் எந்த அவையிலும் உறுப்பினர் அல்லாத அவர் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒன்றின் உறுப்பினராக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் சட்டமேலவைக்கு போட்டியின்றி உறுப்பினராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அவருடன் பா.ஜ., உறுப்பினர்கள் 4 பேர் சேர்த்து 9 பேர் மேலவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE