தாவூத் உதவியாளரை காப்பாற்றிய பாக்., வம்சாவளி மாஜி அமைச்சர்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளரும், சூரத் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான டைகர் ஹனிப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க விடுத்த கோரிக்கையை, இங்கிலாந்து அரசு நிராகரித்துள்ளது.குஜராத் மாநிலம் சூரத்தில் 1993ல் நடந்த இரு வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான முகமது ஹனிப் உமர்ஜி படேல் எனப்படும்
Dawood Ibrahim, Aide, Tiger Hanif, UK Minister, Pak Origin, Blocked, Pakistan, India, extradition, பாகிஸ்தான்,

இஸ்லாமாபாத் : மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளரும், சூரத் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான டைகர் ஹனிப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க விடுத்த கோரிக்கையை, இங்கிலாந்து அரசு நிராகரித்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் 1993ல் நடந்த இரு வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான முகமது ஹனிப் உமர்ஜி படேல் எனப்படும் டைகர் ஹானிப் தலைமறைவானார். கடந்த 2010ல் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள போல்டன் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடமாடிய டைகர் ஹனிப்பை ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


57 வயதாகும் ஹனிப், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் சித்ரவதை செய்யப்படலாம் என கூறி பிரிட்டனில் தங்குவதற்கு முயற்சித்த நிலையில் பல சட்ட வாய்ப்புகளை இழந்தார். கடந்தாண்டு ஹனிப்பின் இறுதி வேண்டுகோளை அடுத்து பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமைச்சரும், உள்துறை செயலரான சஜித் ஜாவித் , தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

'ஹனிப் படேலை ஒப்படைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க உள்துறை செயலர் மறுத்துள்ளார். இதனையடுத்து 2019 ஆகஸ்டில் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது' என பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹனிப்பை இந்தியாவிடல் ஒப்படைக்க முதலில் முன்னாள் உள்துறை செயலாளர் தெரேசா மே, ஜூன் 2012 ல் உத்தரவிட்டார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஹனிப் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.


latest tamil news


'மேல்முறையீடு செய்துள்ள ஹனிப் கேள்விக்குரிய நிகழ்வுகளை நினைவுகூர முடியவில்லை என்று கூற எதுவும் இல்லை அல்லது இந்தியாவில் உள்ள நீதிமன்றம் கூறும் எந்த அளவையும் கருத்தில் கொள்ள விரும்பவில்லை அல்லது கருத்தில் கொள்ள முடியாது. நியாயத்திற்கு பாரபட்சம் ஏற்படுமென்பதால் ஏதேனும் குற்றவியல் விசாரணையின் அளவைக் கருத்தில் கொள்ள விரும்பவில்லை' என லண்டன் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா இரண்டாவது பிரிவில் உள்ள நாடாகும். அதாவது எந்தவொரு ஒப்படைப்பு கோரிக்கையிலும் உள்துறை செயலாளர் கையெழுத்தே இறுதியானதாகும். இந்த வழக்கில் அதுபோன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyan - Tiruchirapalli,இந்தியா
19-மே-202007:56:16 IST Report Abuse
kalyan நாலு இங்கிலாந்து பயங்கரவாதிகளை இந்தியாவில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டால் இங்கிலாந்து தானே இவர்களையும் மலையவையும் திருப்பி அனுப்பும் செய்யுமா மோடி அரசு?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மே-202004:33:13 IST Report Abuse
J.V. Iyer இவனைப் போன்ற கொலை, கொள்ளைக்காரர்கள் பிரிட்டனில் தங்கள் கைவரிசை காட்டினால் தான் அடங்குவார்கள் இந்த பிரிட்டிஷ்காரர்கள். நல்லது செய்தல் ஆற்றீராயினும்..தீயது செய்யாதீர்கள் புண்ணியவான்களே
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
19-மே-202004:13:14 IST Report Abuse
Rajesh குறைந்தபட்சம் இங்கிலாந்து அரசு கைது பண்ணியது..... புரியுதா...... இங்கிலாந்து நாட்டிற்கு, கேடு எப்போதோ துவங்கிவிட்டது...... முழித்துக் கொண்டதினால் தான், பிரெக்ஸிட் வந்தது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X