கோவை ரவுண்ட் - அப்:டில்லி சென்ற 17 பேருக்கு பரிசோதனை| No new COVID-19 cases reported in Coimbatore | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை ரவுண்ட் - அப்:டில்லி சென்ற 17 பேருக்கு பரிசோதனை

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share

கோவையில் 15வது நாளாக இன்று புதிதாக யாருக்கும், 'கொரோனா' தொற்று கண்டறியப்படவில்லை.



latest tamil news



கோவையை சேர்ந்த 17 பேர், டில்லி மாநாட்டில் பங்கேற்று, ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில், சிறப்பு ரயில் மூலமாக திருச்சி வந்தனர். அங்கிருந்து, பிரத்யேக வாகனத்தில், கோவைக்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.
தற்போது, சுகாதாரத்துறையின் பிரத்யேக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அதேபோல், கேரளாவில் இருந்து வந்த 75 பேருக்கு, கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X