மான்ச்சேரியலில் 7 வெளி மாநிலதொழிலாளர்களுக்கு கொரோனா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement

மான்ச்சேரியல் : தெலுங்கானாவில் மான்ச்சேரியல் மாவட்டத்தில் புதிதாக 7 வெளி மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலத்தின் மான்ச்சேரியல் மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் திரும்பினர். அவர்களுக்கு நடத்தப்பட்டபரிசோதனையில் 7 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களில் தண்டெப்பள்ளி, லக்செட்டிபேட் மற்றும் ஜன்னாரம் மண்டல் பகுதிகளில் தலா 2 பேர் மற்றும் பெல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டது.


latest tamil news



இவர்கள் கடுமையான சுவாசக்கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பின் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன் மும்பையில் இருந்து திரும்பிய வெளி மாநில (புலம்பெயர் தொழிலாளர்கள்) என தெரிய வந்தது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின்எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இவர்களில் 17 பேர் பும்பெயர் தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X