கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மின்கட்டணம் செலுத்த ஜூன் 6 வரை அவகாசம் நீட்டிப்பு

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: ஊரடங்கின் காரணமாக மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



latest tamil news



மின்கட்டணம் செலுத்த ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


latest tamil news



கடந்த 5ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மே 18க்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதனை ஏற்று தமிழக அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
18-மே-202022:45:48 IST Report Abuse
s t rajan இந்துக் கோயில்களுக்கு Rs. 8 ம் மற்ற மத கோயில்களுக்கு Rs. 2.85 ம் வாங்குவதாகவும் கேள்விப்படுகிறோம்- உண்மை யா? அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்து கோயில் உண்டியலை அரசு எடுத்துக்கொண்டு இந்த பாரபட்சம் ஏனோ? முதலில் இந்து கோயில்கள் அரசின் கரத்திலிருந்து விடுவிக்கப் படவேண்டும். அடுத்து கட்டணங்களில் பாரபட்சம் இருந்தால் அது சரி செய்யப்படவேண்டும்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
18-மே-202022:26:47 IST Report Abuse
sundarsvpr மின் கட்டணம் செலுத்த கூலி கிடைத்தால் தான் முடியும். மத்திய அரசு மின்கட்டணம் செலுத்துபவரின் வங்கி கணக்கில் கடனாய் பணத்தை வழங்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X