ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 52 பேருக்கு கொரோனா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் கொரோனா வைரசின் பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டி செல்கிறது. இது தொடர்பாக இன்று (மே.,18) அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்ததாவது : ஆந்திராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,282 ஆக அதிகரித்தது. ஆந்திராவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து 50 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



கொரோனா பாதித்தவர்களில் சித்தூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் தலா 15 பேர் , மற்றவர்கள் விசாகப்பட்டினம், கர்னூல், கிழக்கு கோதாவரி, நெல்லூர் மற்றும் விஜயநகரம் , மேற்கு கோதாவரி மாவட்டங்கள் என பதிவாகியது. மாநிலத்தில் இதுவரை 705 பேர் நோய் தொற்றால் சிகிச்சையில் உள்ளனர். 1527 பேர் குணமடைந்தனர். மேலும் சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், மொத்த பாதிப்புகளில் 150 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X