முக கவசம் அணியா விட்டால் ரூ.1000 அபராதம்:சந்திரசேகரராவ்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் முக கவசம் அணியாவிட்டால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார்.latest tamil newsதெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரராவ் 4-ம் கட்ட ஊரடங்கின் போது எந்ததெந்த துறைகளுக்கு அனுமதி என்பது குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது: மாநிலத்தில் ஆன்லைன் வர்த்தகம் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மாநிலத்தில் கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கலாம்.


latest tamil newsதலைநகர் ஐதராபாத் நகரத்தில் மட்டும் ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாநிலத்தில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.உத்தரவை மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202005:45:32 IST Report Abuse
ஆப்பு சரிங்க எசமான். கொரோனா இன்னும் மூணு நாளில் போயிருமா?
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
18-மே-202022:25:01 IST Report Abuse
ராம.ராசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் மீது கண்மூடித்தனமாக அதிகாரத்தை செலுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அதீத இன்பம். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்துவிட்டு, பிறகு அவர்கள் மீதே அதிகாரம் செலுத்தும் மனப்போக்கு. உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் போதுமான அளவிற்கு முக கவசத்தைக் கொடுத்து, அதன் பிறகு அப்படி அணியாதவர்கள் மீது நடவடிக்கை என்றால் வரவேற்கத்தக்கது. வாங்கும் பொருளுக்கு வரி, சாப்பிடும் உணவுக்கு வரி, வாகனம் வாங்கினால் வரி, வாகனத்தை சாலையில் ஓட்டினால் வரி, வாகனத்தை இயக்குவதற்கு உரிமைக்கட்டணம் இப்படி நின்றால் உட்க்கார்ந்தால் நடந்தால் என்று அனைத்திற்கும் மக்களிடம் வரி. இதையும் தாண்டி இப்படி அபராதம் என்ற பெயரில். மக்கள் இவர்களிடம் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும். இவர்கள் மக்களுக்கு அனுசரனையாகச் சொல்லமாட்டார்கள். அடக்கு முறைதான் முதலில் கவனத்திற்கு வருகிறது. முக கவசம் கட்டாயம் என்று சொல்லுகிறார். ஆனால் முக கவசம் தொடர்ந்து அணிந்தால் இயற்கையில் கிடைக்கும் ஆக்சிஜன் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது என்று மருத்துவக் குறிப்பு. அதன்படி மக்கள் நடந்துகொண்டால்... இப்படியான கட்டுப்பாடுகள். " கோரோனோ வைரசுக்கு ஊரடங்கு தீர்வல்ல. கிருமி நாசினி தெளிப்பது தீர்வல்ல. எப்போதும் முக கவசம் அணிவது சுவாசப் பிரச்சனை வரலாம்" இப்படியெல்லாம் சொல்வது உலக சுகாதார அமைப்பு. என்றாலும் ஊரடங்கு, கிருமி நாசினி தெளிப்பு, கட்டாய முக கவசம். அரசு, அரசியல்வாதிகள் மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. மக்கள்தான் அரசுக்கு, அரசியல்வாதிகளுக்கு கட்டுப்பாட்டாக வேண்டும். என்றாலும் நாம் மக்களாட்சி நாட்டில்தான் இருக்கிறோம் என்று மக்கள் நம்ப வேண்டும்.
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
18-மே-202022:09:38 IST Report Abuse
Rajesh தயவு செய்து எளியவர்களுக்கு அரசு இலவசமாக முகக்கவசம் கொடுக்கவும் அல்லது வாங்கும் விலையில் அரசே விற்கவும்.... அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்று சொல்லி காயப்படுத்தவேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X