சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல!'

Added : மே 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல!'

'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல!'

காங்கிரசைச் சேர்ந்த, எம்.பி., செல்லகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், ஆட்டோ டிரைவர்கள், சலவை தொழிலாளர்களுக்கு ஊரடங்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்திலேயே, அதிக இளம் விதவைகள் வாழ்வது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் என்ற புள்ளி விபரம் கிடைத்துள்ளது. அதற்கு காரணம், மது என்ற அரக்கன் தான்' என்றார்.இதைக் கேட்ட நிருபர், 'இவருக்கு கிடைச்ச புள்ளி விபரத்துல, தமிழகத்துல, மதுக்கடைகளை திறந்தது யாரு, மதுவை தயாரிக்கிறது யாரு, அவங்களுக்கு, ஆதரவு கொடுக்குறது யாருன்னு போன்ற விபரங்கள் இல்லையா?' என்றார்.
அருகிலிருந்த மூத்த நிருபர், 'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல...' எனக் கிண்டலாகச் சிரிக்க, சுற்றி இருந்தவர்களும் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baala - coimbatore,இந்தியா
19-மே-202011:25:26 IST Report Abuse
baala எவனோ ஒருவன் மது தொழிற்சாலை வைத்து இருந்தால் இவர்கள் ஏன் வாங்க வேண்டும், இவன் வாங்கவில்லை என்றால் அவன் உற்பத்தி செய்ய முடியுமா? அதை ஏன் ஒருவரும் சொல்லுவதில்லை/ வரும் கமிஷன் போய்விடும் அதனால் தான் அதை பற்றி சொல்லுவதில்லை
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-மே-202009:05:07 IST Report Abuse
Bhaskaran நீ ஊர்லதான் இருக்கியா .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-மே-202006:55:23 IST Report Abuse
D.Ambujavalli அதையெல்லாம் சொல்லிவிட்டு கூட்டணிக்கே வேட்டு வைக்கத் துணிவாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X