தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல!'

Added : மே 18, 2020 | கருத்துகள் (3)
Share
 'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல!'

'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல!'

காங்கிரசைச் சேர்ந்த, எம்.பி., செல்லகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், ஆட்டோ டிரைவர்கள், சலவை தொழிலாளர்களுக்கு ஊரடங்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்திலேயே, அதிக இளம் விதவைகள் வாழ்வது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் என்ற புள்ளி விபரம் கிடைத்துள்ளது. அதற்கு காரணம், மது என்ற அரக்கன் தான்' என்றார்.இதைக் கேட்ட நிருபர், 'இவருக்கு கிடைச்ச புள்ளி விபரத்துல, தமிழகத்துல, மதுக்கடைகளை திறந்தது யாரு, மதுவை தயாரிக்கிறது யாரு, அவங்களுக்கு, ஆதரவு கொடுக்குறது யாருன்னு போன்ற விபரங்கள் இல்லையா?' என்றார்.
அருகிலிருந்த மூத்த நிருபர், 'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல...' எனக் கிண்டலாகச் சிரிக்க, சுற்றி இருந்தவர்களும் சிரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X