சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ரகசிய ஏஜென்ட்!

Added : மே 18, 2020
Share
Advertisement
 ரகசிய ஏஜென்ட்!

ரகசிய ஏஜென்ட்!

'அத்தையும், மருமகனும் முதலில் ஒரு முடிவுக்கு வரட்டும். அதற்குப் பின் நாம், தேர்தல் வேலைகளை துவக்கலாம்' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே நடக்கும் மோதலை பார்த்து, சோம்பல் முறிக்கின்றனர், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள். மேற்கு வங்கத்தில், அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்து, 'ஹாட்ரிக்' அடிக் வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் மம்தா. ஆனால், பா.ஜ., அவரை விடுவதாக இல்லை. 'மேற்கு வங்கத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, சாதித்து காட்டுகிறோம்' என, சவால் விடுகின்றனர், அந்த மாநில பா.ஜ., நிர்வாகிகள்.
இதனால், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் உதவியை நாட, திரிணமுல் எம்.பி.,யும், மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி முடிவு செய்துள்ளார். கட்சியில், மம்தாவுக்கு பின், அதிகார மையமாக வலம் வருபவர் இவர் தான். மம்தாவின் எண்ணமோ வேறு மாதிரியாக உள்ளது. 'இந்த ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதை வைத்து பிரசாரம் செய்வோம். பிரசாந்த் கிஷோருக்கு எதற்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுக்க வேண்டும். அவர், பா.ஜ., வின் ரகசிய ஏஜென்ட்' என்கிறார். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால், திரிணமுல் நிர்வாகிகள் சோர்ந்து போயுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X