சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 18, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அதிகாரிகளை நியமித்து என்ன பயன்... நம்ம ஆட்கள் தான், கட்டுப்பட மாட்டேன் என்கிறார்களே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை: சென்னையில், நோய் பரவல் நடவடிக்கைகளில், பெரும் ஓட்டை விழுந்துள்ளது. அது தான், நோய்பரவல் அதிகரித்திருப்பதற்கு காரணம். கூடுதல் அதிகாரிகளை நியமித்து, வார்டுகள் அளவில் கவனம் செலுத்துவது பயனளிக்க கூடும்.


'உங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த, வைகோவிடம், வார்த்தைகளை கடன் வாங்கி, பயன்படுத்தி உள்ளீர்கள் போலிருக்கிறது... ' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி அறிக்கை:
மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு, மின்சார சட்டத்திருத்தம் கொண்டு வருவது, மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சி. இது, கூட்டாட்சி தத்துவத்தை, குழிதோண்டி புதைக்கும் செயல். இலவச மின்சாரம் சலுகையல்ல; அது உரிமை



'நேற்று தானே, அரசு அலுவலகங்கள் திறந்தன; அதற்குள், ஜரூராக உத்தரவு பிறப்பித்து விட்டனரா...' என, சந்தேக கேள்வி எழுப்ப துாண்டும் வகையில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மணிகண்டன் அறிக்கை:
இலவச மின்சாரம் பெறும் பெரும்பாலான விவசாயிகள், கூடுதல் குதிரை திறன் கொண்ட, மின் மோட்டார்களை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தினால், 1 குதிரை திறனுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த மின் வாரியம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை, திரும்பப் பெற வேண்டும்.
.



'சந்தேகப்படாதீர்கள்... அந்தந்த மாவட்டங்களுக்கு, காங்., குழுக்களை அனுப்பி, ஆய்வில் ஈடுபடுங்கள்... என்ன, யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்களா... அது தான் நிலைமை...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் அறிக்கை:
ஊரடங்கு தளர்த்தப்படாத, 12 மாவட்டங்களில், சென்னை தவிர, பிற மாவட்டங்களில், தொற்று குறைவாக இருந்தது; தற்போது அதிகமாகி விட்டது. இந்த மாவட்டங்களை, அரசு கை விட்டு விட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.



'ரொம்ப தள்ளி வைத்தால், எந்த வகுப்பில் படிக்கிறோம் என்பதையே, மாணவர்கள் மறந்து விடுவர்...' என, கிண்டலாக சொல்லும் வகையில், அ.ம.மு.க.,. பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
கொரோனா தொற்று இன்னும் கட்டுப்படவில்லை. இச்சூழலில், பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது, தேவையற்ற விபரீதத்தில் முடிந்து விடும். மாணவர்கள் நலன் கருதி, பொதுத்தேர்வை, தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X