சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

எம்.எல்.ஏ.,வின், 'அறிவை' கண்டு வியந்த அதிகாரிகள்!

Added : மே 18, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 எம்.எல்.ஏ.,வின், 'அறிவை' கண்டு வியந்த அதிகாரிகள்!

எம்.எல்.ஏ.,வின், 'அறிவை' கண்டு வியந்த அதிகாரிகள்!

''மொதல்ல பள்ளிக்கூடம் கட்டுங்கோ... அப்புறம் ரோடு போடலாம்ன்னு சொல்லியிருக்கா ஓய்...'' என்றபடியே, திண்ணையில் அமர்ந்தார்,
குப்பண்ணா.''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில இருக்கற அரசு பள்ளிக் கூடத்துக்கு, சரியான கட்டட வசதி இல்லை... மழை, வெயில் காலத்துல, ஆசிரியர்களும், மாணவர்களும் ரொம்ப கஷ்டப்படறா... அதனால, புதுசா கட்டடம் கட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த, எம்.பி.,யான டி.ஆர்.பாலு, தன் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கியிருக்கார் ஓய்...
''ஆனா, மாவட்ட அரசியல் காரணத்தால, பல மாசமா, அந்த வேலை நடக்கலை... இதனால, நல்லா இருக்கிற ரோட்டை, 'சரியில்லை'ன்னு சொல்லி, 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளை துவக்கிட்டா ஓய்...
''இதனால, அதிருப்தி அடைஞ்ச பொதுமக்கள், 'முதல்ல பள்ளிக்கூடத்துக்கு கட்டடம் கட்டுங்கோ... அப்புறமா, ரோடு போடலாம்'ன்னு, கலெக்டர் ஆபீசுல கோரிக்கை மனு கொடுத்துருக்கா ஓய்...'' என விளக்கினார்,
குப்பண்ணா.''இந்த கொடுமையை என்னன்னு சொல்லுறதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.''என்னன்னு சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''கோவை, தொண்டாமுத்துார் மற்றும் காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன்ல, உளவுத்துறையில் வேலை பார்க்குற ரெண்டு போலீஸ்காரங்க, சமீபத்துல நண்பர்களாக மாறியிருக்காங்க...
''இருவரும், ஒண்ணா சேர்ந்து, 'சரக்கு' அடிச்சப்போ, தங்கள் தொடர்புல இருக்குற, பெண்களைப் பத்தி பேசியிருக்காங்க...
''கடைசியில பார்த்தா, ஒரே பெண்ணு தான், இவங்க ரெண்டு பேர்கிட்டேயும், தொடர்புல இருந்துருக்கு... இதனால, அந்த பெண்ணின் வீட்டுக்கு போன, காருண்யா நகர் உளவுத்துறை போலீஸ்காரர், அவங்களை அடிச்சு உதைச்சிருக்காருங்க...
''அவங்களோ, துாக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்காங்க... அவங்களைக் காப்பாத்தி, ஆஸ்பத்திரில சேர்த்துருக்காங்க...
''இந்த விஷயம் வெளியே தெரிஞ்சதால, உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட, உளவுத்துறை போலீசார் ரெண்டு பேரையும், 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''நம்ம, எம்.எல்.ஏ., வுக்கு இவ்வளவு அறிவான்னு, தொகுதி மக்கள் கிண்டல் பண்ணுறாங்க பா...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.
''என்ன ஓய், சொல்றீர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''அ.தி.மு.க., தென்சென்னை
தெற்கு மாவட்ட செயலரும், தி.நகர், எம்.எல்.ஏ.,வுமான சத்யா, அப்பகுதி மக்களுக்கு, நிவராண உதவி கொடுத்தாரு பா...''அப்போ, ஒரு பெண், 'இங்கே அடைச்சிருக்குற சாக்கடையை, சரி செய்ய சொல்லுங்க...' என, சத்யாகிட்ட சொல்லிருக்காங்க... உடனே அவரும், தன், மொபைல்போனை எடுத்து, மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சாக்கடையை சரி செய்ய சொல்லி, உத்தரவு போட்டுருக்காரு பா...
''அங்கேயிருந்த அதிகாரி, 'இது, எங்க வேலை இல்லை... 'மெட்ரோ' அதிகாரிங்ககிட்ட சொல்லுங்க'ன்னு, போனை, 'கட்' பண்ணிட்டாரு... சாக்கடையை சரி பண்ண, மின்
வாரியத்துக்கு போன் பண்ணின, எம்.எல்.ஏ.,வின், 'அறிவை' கண்டு, மக்கள் கிண்டல் பண்ணுறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.நண்பர்கள் சிரித்தபடியே, நடையை
கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Gopalan - Bangalore ,இந்தியா
19-மே-202016:00:21 IST Report Abuse
V Gopalan The MLA's action is like Vadivelu's Vandu Murugan when he says his followers to phone up to Post Office for electricity problem, his follower says it is not Post Office it is for the Electricity Board. Will this not match this one to Vandu Murugan's?
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
19-மே-202011:19:48 IST Report Abuse
natarajan s இதெற்கெல்லாம் முன்னோடி, திரு திருநாவுக்கரசர், எம்ஜியார் தான் ஒன்று மற்றவர் எல்லாம் பூஜ்யம் (1000000000) . இவங்களை நம்பித்தான் வாழ்க்கை நடக்கிறது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-மே-202009:03:26 IST Report Abuse
Bhaskaran இவனுங்களுக்கு அறிவுங்கிறதே கிடையாது .நடமாடும் பல்கலைக்கழகம்னு புகழப்படும் ஒருத்தர் கிரிக்கெட்டில் நல்லா கோல் போடுவாங்கன்னு பேசியதை அந்தக்கால துக்ளக்கில் படிச்சிருக்கேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X