பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய விஜயன், ' கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. இதில்130 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 21 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள், 7 பேர் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள், ஒருவருக்கு மட்டும் தொடர்பில் இருந்தது மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது' இவ்வாறு விஜயன் பேசினார்.


latest tamil news



கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து பேசிய போது, ' வணிக வளாகங்கள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் குளிர்சாதனம் இல்லாம் இயங்க வேண்டும். முடி திருத்தம் மற்றும் முக சவரத்திற்கு மட்டுமே அனுமதி. இணைய வழி தளம் தயாரான பிறகு அரசு நடத்தும் மதுக்கடைகள் திறக்கப்படும். மதுக்கூடங்களில் வீட்டிற்கு வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படும்' இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X