ஓமனில் மேலும் 193 பேருக்கு கொரோனா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement

மஸ்கட் : கொரோனா பாதிப்புகளால் ஓமன் நாட்டில் மேலும் 193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சின் பல்வேறு நகரங்களிலும் நோய் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளது. அதை கட்டுக்குள் வைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அமீரகத்தின் பல்வேறு அமைப்புகளும் அரசிற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் ஓமன் நாட்டில் மேலும் 193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 5,379 ஆக அதிகரித்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர் ஓமன் நகரையும், மற்ற 121 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. புதிதாக யாரும் பலியாகவில்லை. இதுவரை நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 31 பேர் குணமடைந்தனர். நோய் தொற்றால் இதுவரை குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 1,496 ஆக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X