பொது செய்தி

இந்தியா

சிறப்பு ரயில்கள் மூலம் ரயில்வேக்கு ரூ.76 கோடி வருவாய்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Indian Railways, Railway, earns, ticket, sale, lockdown, சிறப்பு ரயில்கள், ரயில்வே, வருவாய், ஊரடங்கு

புதுடில்லி: நாடு முழுவதும் மே 12 முதல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம், இந்திய ரயில்வே, ரூ.76 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 25ல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே, நாடு முழுதும், 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம், 13 ஆயிரத்து, 100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.


latest tamil news



4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பயணியர் வசதிக்காக, டில்லியிலிருந்து, பல்வேறு நகரங்களுக்கான சிறப்பு ரயில் சேவையை, கடந்த, 12ல் ரயில்வே துவக்கியது. டில்லியிலிருந்து இருமார்க்கத்திலும் 15 ரயில்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஒருவாரத்தில், 3.80 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், 2.05 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.76.22 கோடி ரயில்வேக்கு வருவாய் கிடைத்ததாகவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan Iyer - Bangalore,இந்தியா
19-மே-202010:14:12 IST Report Abuse
Kannan Iyer 13 ,100 ரயில்கள் சேவை ரத்து 15 ரயில்கள் ஒட்டப்படுகின்றன எவ்வளவு வருமான இழப்பு
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
19-மே-202006:54:47 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இந்த வருவாய் கணக்கு எதற்காக சொல்கிறார்கள் என தெரியவில்லை.. இது தேவை இல்லை.. அப்படி பார்த்தல் பல ரயில்கள் ஓடவில்லை.. தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் கொடுத்தாகணும் ரயில் ஓடுதோ இல்லையோ.. அந்த கணக்கை யார் கூட்டி கழிப்பது ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X