பாக்.,கில் ஒரே நாளில் 1,119 பேருக்கு கொரோனா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,119 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



அமெரிக்காவை தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. பாகிஸ்தானிலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க பிரதமர் இம்ரான் கானும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,119 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,125 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் 30 பேர் பலியாகினர். இதனால் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 903 ஆக உயர்ந்தது.


latest tamil news



பாக்.,கில் நோய் தொற்றில் இருந்து 11,922 பேர் குணமடைந்தனர். நேற்று ஒரே நாளில் 13,925 பேர் பரிசோதிக்கப் பட்டனர். மேலும் இதுவரை நாட்டில் 3,87,335 பேர் பரிசோதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 15,346 பேர் பஞ்சாப்பிலும், 16,377 பேர் சிந்துவிலும், 6,061 பேர் பக்துன்காவிலும், 2,692 பேர் பலுசிஸ்தானிலும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 716 பேர்இஸ்லாமாபாத்திலும், 540 பேர் கில்கித் பல்திஸ்தானிலும் , பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 112 பேரும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
19-மே-202002:05:18 IST Report Abuse
chakra எங்க மோடியோட நிர்வாகத்திறனை நீங்க மிஞ்ச முடியாது சீக்கிரமே நாங்க அமெரிக்காவையும் தோற்கடிப்போம்
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
19-மே-202000:07:30 IST Report Abuse
PANDA PANDI பாக் யில் 1192 ஐய . We are more than u.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202023:26:41 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் துப்பாக்கியும் வேலை செய்யாது. போர் விமானங்களும் வேலை செய்யாது. நட்புறவும் நன்மையையும் பாராட்டினால் மக்களுக்கு ஏற்படும் எந்த தீங்கையும் வெல்லலாம். ஆனால் ஆட்சியில் இருந்து ஆட்டையை போடும் அரசியல்வியாதிகளும், பயம்காட்டி கமிஷனுக்காக ராணுவத்தளவாடம் வாங்கும் ராணுவத்தளபதிகளும், அவைகளை விற்று வருமானம் பார்க்கும் பெருமுதலாளி நாடுகளும் இந்த கொடிய நேரத்தில் கூட பயம் காட்டி கொலைக் கருவிகளை கொள்முதல் செய்ய வைக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X