பிரேசிலில் உச்சத்தை தொடும் கொரோனாவால் சிக்கல்

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement

பிரேசிலியா : கொரோனா பாதிப்பு அதிகரித்து பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 7,938 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரேசிலில் நோய் தொற்று அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 483 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,41,000 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 16,118 ஆக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் பிரேசில் 4 வது இடத்தில் உள்ளது.


latest tamil news



பிரேசிலில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட பெரிய நகரளான சாவ் பாலோவில் இதே நிலை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் நகரின் சுகாதார அமைப்பு தகர்ந்துபோகும். அம்மாவட்ட மருத்துவமனைகளில் 90 சதவீதம் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி விட்டது. ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காமல் பலரும் மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர் என அதன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாவ் பாலோவில் மட்டும் நோய் தொற்றால் இதுவரை 3000 பேர் பலியாகியுள்ளனர். இங்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், விதிகளை பின்பற்றாமல் பலரும் வாரயிறுதி நாட்களில் கடற்கரைக்கு செல்வது, வெளியில் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சாவ் பாலோவில் விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களைத் தண்டிக்கும் திட்டங்கள் ஏதும் அமலில் இல்லை. எனவே, மக்கள் முகக்கவசங்களை அணியாமலும், சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் தெருக்களில் வழக்கம்போல் சென்றதை பார்க்க முடிந்தது". மேலும் பல நாடுகளிலும் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு இயல்புநிலை திரும்பும் வேளையில், சாவ் பாலோவில் தற்போது ஊரடங்கு விதிமுறை தீவிரமாக நடைமுறைப் படுத்தும் செயல்பாடு தொடங்கி உள்ளது.


latest tamil news



இது தொடர்பாக மாகாண கவர்னருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக மேயர் தெரிவித்தார். நகரம் முழுவதும் உள்ள மருத்துவ மனைகளில் நெருக்கடி நிலை உருவாவதற்கு முன்னர் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், அதற்கு மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்றும் மேயர் கோவாஸ் கூறுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X