ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,926 பேருக்கு கொரோனா

Updated : மே 18, 2020 | Added : மே 18, 2020
Share
Advertisement

மாஸ்கோ : கொரோனா தாக்கம் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 8,926 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பாதிப்புகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. உலகளவில் அதிக பாதிப்புடன் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது. ஆனால் கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை விட குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 8,926 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


latest tamil news



கடந்த வாரத்தில் ஒரே நாளின் சராசரி பாதிப்பு 11,656 ஆக இருந்தது. இது ஒரு நாளின் அதிகபட்ச பாதிப்பாகும். நாட்டில் நோய் பரவலை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,678 ஆக உயர்ந்தது. இதுவரை நோய் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,722 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 91 பேர் பலியாகினர். நோய் பாதிப்புகளில் இருந்து 70,000 பேர் குணமடைந்தனர். மாஸ்கோவிலும் கொரோனா தொற்றால் பலருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X